துப்பாக்கியால் சுட வந்த 4 மர்ம நபர்கள்.. துடைப்பத்தால் வீரத்துடன் விரட்டியடித்த பெண்மணி

துப்பாக்கியால் சுட வந்த 4 மர்ம நபர்கள்.. துடைப்பத்தால் வீரத்துடன் விரட்டியடித்த பெண்மணி
Published on

ஹரியானா மாநிலம் பவானி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தனது வீட்டிற்கு முன்பாக நின்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பைக்குகளில் வந்த 4 மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கியைக் கொண்டு இளைஞரை சரமாரியாக சுட்டனர். இதனால் அச்சமடைந்த அந்த இளைஞர், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு அருகில் இருந்த வீட்டிலிருந்து வெளியே வந்த பெண்மணி, துடைப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு, மர்ம நபர்களை விரட்டினார். இதையடுத்து, மர்ம நபர்கள் பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com