`விமான விபத்தில் 298 பேர் மரணம்.. ரஷ்யா தான் பொறுப்பு’’ - அதிர்ச்சி தீர்ப்பு
கடந்த 2014ம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே பொறுப்பு என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நெதர்லாந்தில் இருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த இந்த விமானம், கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏவிய ஏவுகணையால் வீழ்த்தப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த 298 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ரஷ்யாதான் முழுப் பொறுப்பு என ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கூறியுள்ளது. எனினும், இந்த தீர்ப்பை தாங்கள் ஏற்க மாட்டோம் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
Next Story
