America | ஒரே நாளில் 2100 விமானங்கள் ரத்து - என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
ஒரே நாளில் 2100 விமானங்கள் ரத்து - என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
#US #Flightsgrounded ஒரே நாளில் 2100 விமானங்கள் ரத்து - என்ன நடக்கிறது அமெரிக்காவில்? அமெரிக்காவில் நாடு தழுவிய விமானப் போக்குவரத்து முடக்கம் நீங்கிய பிறகும், மூன்றாவது நாளாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் அடுக்கடுக்காகக் குவிந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 ஆயிரத்து 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 9 ஆயிரத்து 400 விமானங்கள் தாமதமாகின. இதற்கிடையே, திங்கள்கிழமைக்குள் விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சீன் டஃபி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
