இந்தியா மீது கூடுதலாக 10% வரி? பிரிக்ஸ்-க்கு எதிராக பதறும் டிரம்ப்

x

இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் மாநாட்டை ஆதரிக்கும் நாடுகள் 10 சதவீதம் கூடுதல் வரியை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் , அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகளோடு பிரிக்ஸ் மாநாட்டில் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக பத்து சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு டாலருக்கு நிகரான கரன்சியை கொண்டுவர முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்