

இலங்கையின் அனுராதபுரம் பகுதியில், ஒரு விருந்து நிகழ்ச்சியில்,
ஒரு வயது ஆண் குழந்தைக்கு, பீர் கொடுக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காட்சியை படம் பிடித்து, முக நூல் பக்கத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் பதிவேற்றம் செய்திருந்தனர். இதனை பார்த்த இலங்கை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து, குழந்தையின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் என மொத்தம் 4 பேரை கைது செய்தனர். பின்னர், அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.