``1 ஆண்டு சிறை'' - டிரம்ப் சொன்ன அதிர்ச்சி தகவல்

x

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட வன்முறைக்கு வெளிநாட்டு எதிரிகளின் படையெடுப்பே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய படையை அனுப்புமாறு ஆளுநர் கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்த்த‌தாகவும், ஆனால் நடக்காத‌தால், துரித நடவடிக்கையாக படையை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் போராட்டங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ள டிரம்ப், போராட்டத்தில் அமெரிக்க கொடிகள் எரிக்கப்படுவதை காண முடிந்ததாகவும், அது நமது நாட்டை நேசிக்கும் மக்களால் எரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கக் கொடியை எரித்தவர்கள் ஒரு வருடம் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்