பணிச்சுமை எதிரொலி - அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி

பணிச்சுமை எதிரொலி - அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி
Published on

பணிச்சுமை எதிரொலி - அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி

ஆரணி அரசு போக்குவரத்து பணிமனையில், பணிச்சுமை காரணமாக ஓட்டுநர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி, கடந்த 10 ஆண்டுகளாக ஆரணி–வேலூர் பேருந்தை ஓட்டி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இங்கு பணிச்சுமை அதிகரித்ததால், அவர் மன உளைச்சலில் இருந்துவந்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைத் தாண்டி ஓட்டினாலும், மேலும் பேருந்துகளை இயக்கும்படி மேலாளர் ராமு மற்றும் உதவிப் பொறியாளர் கணேசன் ஆகியோர் அழுத்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாலாஜி, பணிமனை அலுவலகத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனே மீட்டு, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com