உலா வரும் காட்டு கொம்பன் - அச்சத்தில் மக்கள்

x

இடுக்கி மாவட்டதில் மக்கள் வசிக்கும் பகுதியில் உலா வரும் காட்டுயானையை விரட்ட கோரிக்கை எழுந்துள்ளது.

கேரள மாநிலம் மூணார் அருகே உள்ள நல்லதண்ணி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுக்கொம்பன் என்ற விரிஞ்ச கொம்பன் யானை உலா வருகிறது. இந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் காட்டுக்கொம்பன் யானை அப்பகுதியில் உள்ள ஓடைநீரில் ரம்யமாக நடந்து வந்து கரையேறி செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்