"ஆசையாக விருந்துக்கு வந்த காதல் ஜோடியை வெட்டி வீசிய பெண்ணின் சகோதரர்" நடந்தது என்ன..?

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் புதுமண தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
x

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் புதுமண தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர் திருவண்ணாமலையை சேர்ந்த சேகர் என்பவரை காதலித்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து சென்னையில் தங்கியிருந்த நிலையில் பிரச்சனை வேண்டாம் என கூறி சரண்யாவின் குடும்பத்தினர் அவர்களை விருந்துக்கு அழைத்தனர். இதனை ஏற்று சொந்த ஊர் வந்த தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 5 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த சரண்யா, அவரது கணவர் சேகர் ஆகியோர் ஊர் திரும்பிய நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதால் சோழபுரம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்