TN Rain | Rain Alert | 'இன்னும் முடியல..' - தமிழகத்திற்கு திடீர் அலர்ட்

x

தென் தமிழகம், டெல்டாவில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு. தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் அதிகாலையில் ஓரிரு இடங்களில் அதிக பனிமூட்டம் நிலவும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்