Heavy Rain | Weather Update |"சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை"-3 நாட்களுக்கு உஷாரா இருங்க

• தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இந்த கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. • டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. • வடகிழக்கு பருவ மழையினை எதிக்கொள்ள, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் மூன்று அணியினர் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியிலும், • இரண்டு அணியினர் கடலூர் நகராட்சிக்கு அருகிலும் மீட்பு மற்றும் நிவாரண பணிக்காக முன்னெச்சரிக்கையாக நிலை நிறுத்தப்பட்டுள்னனர். • மேலும், தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு அணி வெள்ளிக்கிழமை முதல் விழுப்புரம் மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com