Ditwah Cyclone Alert | ஒரே நேரத்தில் பறந்த ரெட், ஆரஞ்சு அலர்ட் - இந்த மாவட்டங்கள் உஷார்
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதே போன்று நாளை 29ம்தேதி ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர்,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை மறுநாள் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
