Heat | இதுவரை இல்லாத உச்சம்.. கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயில் இந்த போடு போடுது

இதுவரை இல்லாத உச்சம்.. கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயில் இந்த போடு போடுது

இதுவரை இல்லாத உச்சம்.. கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயில் இந்த போடு போடுது

#heat #delhi #thanthitv

இந்தியாவின் வட மற்றும் மத்திய மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது.

டெல்லி மற்றும் ராஜஸ்தானை விட, இந்த முறை கிழக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகள் அதிக வெப்பத்தைச் சந்தித்து வருகின்றன.

குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.

நாட்டில் அதிக வெப்பமானது உத்தரபிரதேசத்தின் முகல்சராய் நகரில் பதிவாகியுள்ளது. அங்கு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியுள்ளது.

இதைத்தொடர்ந்து, பீகாரின் பக்ஸர், சசாராம் பகுதிகளிலும், ஒடிசாவின் பாலங்கிர், ரூர்கேலா, தால்சர் பகுதிகளில் 44 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது.

இதே போல் சத்தீஸ்கரின் பிலாஸ்பூர், மசங்கஞ்ச், மகாராஷ்டிராவின் சந்திரபூர் மற்றும் தெலங்கானாவின்

மனுகுரு ஆகிய பகுதிகளிலும் 44 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது.

X

Thanthi TV
www.thanthitv.com