Uttar Pradesh | மனநலம் பாதித்தவரை கட்டி வைத்து அடித்த ஊர் மக்கள் - ஓடிவந்த போலீஸ்.. பரபரப்பு

x

திருடன் என நினைத்து மனநலம் பாதித்த நபரை தாக்கிய கிராம மக்கள்

உத்தரப்பிரதேசத்தில் திருடன் என தவறாக நினைத்து மனநலம் பாதிக்கப்பட்ட நபரை பொதுமக்கள் ஒன்றுதிரண்டு தாக்கியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா Gonda மாவட்டம், மதேப்பூர் Maddhepur கிராமத்தில், சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடி​த்து பொதுமக்கள் கடுமையாக தாக்கினர்.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தாக்கப்பட்டவர், கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்ரூப் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், தாக்குதலில் ஈடுபட்ட சுமார் 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்