இறங்கும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, தைவான் கம்பெனிஸ் -தமிழகத்தில் மெகா திட்டம்

x

தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் - 2030 எனும் 5 ஆண்டு திட்டம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது...

சென்னையில் 100 கோடி மதிப்பீட்டில் செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு, பரிசோதனை மையம் உருவாக்கப்படும் என்றும்,

கோவை சூலூர், பல்லடத்தில் தலா 100 ஏக்கர் பரப்பில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான இயந்திர தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

செமிகண்டக்டர் வடிவமைப்பு, உட்கட்டமைப்பு மேம்பாடு, சிறிய அளவிலான சிப் உற்பத்தி, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி உள்ளிட்ட 5 வகையான திட்டங்களை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது...

இவற்றை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, தைவான் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்