மா இலையால் முதியவருக்கு நடந்த சோகம் - தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்

x

மா இலையால் முதியவருக்கு நடந்த சோகம்

தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்

#thiruvannamalai #thanthitv

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது பூண்டி ஆசிரமரத்தில் மாணிக்கம் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆயுத பூஜைக்காக முலைப்பால் ஆசிர‌ம‌ம் பகுதியில் மா இலை பறிக்க சென்றுள்ளார். அப்போது, முலைப்பால் ஆசிரமத்தில் வேலை பார்க்கும் பிரசாந்த் என்ற இளைஞருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கீழே விழுந்த மாணிக்கத்தின் முகத்தில் அடிபட்டு மூக்கில் ரத்தம் வழிந்துள்ளது. காயமடைந்த மாணிக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பிரசாந்தை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்