Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.12.2025) | 6 AM Headlines | ThanthiTV

x
  • நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி பெருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது....ஒரு லட்சத்து எட்டு வடைமாலை அலங்காரத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்...
  • அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி வழங்கும் சாந்தி மசோதாவை நிறைவேற்ற ஆதரவளித்த எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்....இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், புதுமைகளைப் படைப்பதற்கும், இது சரியான நேரம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
  • 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்...வேளாண் அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் மீது மசோதா நகலை கிழித்து எறிந்ததால் பரபரப்பு நிலவியது...
  • தமிழ்நாட்டில் வாக்காள பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நிறைவுபெற்ற நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது...பட்டியலில் பெயர் இடம்பெறாவிட்டால் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...
  • ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள அவதார் திரைப்படத்தின் மூன்றாவது பாகம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று வெளியாகிறது...தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் படம், முந்தைய வசூல் சாதனைகளை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.....


Next Story

மேலும் செய்திகள்