Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.12.2025) | 6 AM Headlines | ThanthiTV
- WWE ஜாம்பவான் ஜான்சினா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்...கடைசி போட்டி என்பதால், ஜான்சினா குறித்த நினைவுகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்...
- திருச்சியில் பிரபல கொள்ளையன் ராஜசேகரை கோவை தனிப்படை போலீசார் சுட்டுபிடித்தனர்..கைது செய்ய முயன்ற போது காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதால், சுட்டுப்பிடித்ததாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..
- டெல்லியில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசை குறைக்க ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் தலைமையில் 15 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது...காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக, ஆதார அடிப்படையில் பரிந்துரைகளை இந்த குழு 2 மாதங்களில் சமர்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
- திருப்பரங்குன்றத்தில் 8 அடி கிரானைட் கல்லில் எப்படி தீபம் ஏற்ற முடியும்? என்று கோயில் நிர்வாகம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது..மலையில் உள்ளது தீபத்தூணா? அல்லது சர்வே தூணா? என முடிவெடுக்க நீதிபதி தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது...
- திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி. சவுகதா ராய் நாடாளுமன்றத்தில் மின்னணு சிகரெட்டைப் பயன்படுத்தியதாக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் குற்றஞ்சாட்டியுள்ளார்...இது, நாடாளுமன்ற ஒழுக்கத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்று மக்களவை சபாநாயகரிடம் அவர் புகார் அளித்துள்ளார்..
Next Story
