Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (19-12-2025) | 11AM Headlines | Thanthi TV
- ஜனவரி 5ஆம் தேதிக்குள் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்...கரூர் சம்பவத்தை தொடர்ந்து ரோடு ஷோக்கு நெறிமுறைகள் வகுக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது..
- வட மாநிலங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது...சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன...
- திருவள்ளூர், உப்பரப்பாளையத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது..சிலிண்டர் வெடித்ததில் வீடு இடிந்து சேதம் அடைந்த நிலையில், கணவன், மனைவி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
- உக்ரைன், ரஷ்யா போர் விரைவில் முடிவடையும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மியாமியில் இந்த வாரம் ரஷ்ய பிரதிநிதிகள் உடனான உயர்நிலை குழு பேச்சுவார்த்தையில், போர் நிறுத்தம் இறுதி கட்டத்தை எட்டும் என்றும் கூறினார்...
- ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்சில் நிதானமாக ஆடி வரும் ஆஸ்திரேலியா 270 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்றுள்ளது.முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 286 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
Next Story
