Today Headlines | காலை 11மணி தலைப்புச் செய்திகள் (18.11.2025)| 11 AM Headlines| ThanthiTV
- அரியலூர் மாவட்டம் இலையூரில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் கருவறையில் இருந்த மரகத லிங்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்...பல கோடி ரூபாய் மதிப்புள்ள லிங்கம் திருடுபோனது தொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்...
- ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது...திருப்பூர், நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...
- அமெரிக்காவின் மினசோட்டா Minnesota மாகாணத்தில், கர்ப்பிணிப் பெண்ணை பனிசூழ்ந்த சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற அதிகாரி...ஈக்வடாரைச் சேர்ந்த அவரிடம் குடியேற்ற ஆவணம் இல்லை எனக்கூறி, கைகளில் விலங்கிட்டு இழுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
- ஜனவரி 24ம் தேதி விருதுநகரில் திமுக தென்மண்டல இளைஞரணி சந்திப்பு நடைபெற உள்ளது...சமீபத்தில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்ற நிலையில், அடுத்து விருதுநகரில் நடைபெறுகிறது...
- டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் பகுதி நச்சுப்புகை மண்டலமாக காட்சியளித்தது...காற்றின் தரக்குறியீடு 349 என்ற அளவில் பதிவானதாக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது...
Next Story
