Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (13.12.2025) | 11 AM Headlines | ThanthiTV

x
  • டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மோசமானது.அக்‌ஷர்தம் பகுதியில் காற்றின் தரம் 419ஐ எட்டியதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
  • நெல்லை, பாளையங்கோட்டை மகளிர் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய விவகாரம்....6 மாணவிகளை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
  • பூண்டி ஏரி முழு கொள்ளளவான 35 அடியை எட்டியது....சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு செம்பரம்பாக்கம், புழல், பூண்டி என 3 ஏரிகளும் ஒரே நேரத்தில் நிரம்பியுள்ளன
  • 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, கொல்கத்தாவில் தனது பிரமாண்ட சிலையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.சிலை திறப்பு விழாவில் திரளான ரசிகர்கள் கலந்துகொண்டு உற்சாகம் அடைந்தனர்.
  • 2001 நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதலின் 24வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்