Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (29.01.2026) | 1PM Headlines | ThanthiTV

x
  • மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் விதமாக நாடாளுமன்றம் திகழ வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.......எம்.பி.க்கள் அனைவரும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்....
  • விமான விபத்தில் அகால மரணமடைந்த மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உடலுக்கு முழு உடல் அரசு மரியாதை செலுத்தப்பட்டது....பாராமதியில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஜித் பவாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்...
  • மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று 2025-26-ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்...பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டிற்கு இது முன்னோட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவில் ஒரே நாளில் சவரனுக்கு 9 ஆயிரத்து 520 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது....ஒரு கிராம் தங்கம் 16 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
  • சென்னையில் ஆபரணத் தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் கிலோவுக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது....ஒரு கிராம் வெள்ளி 425 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது...

Next Story

மேலும் செய்திகள்