Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.12.2025) | 1PM Headlines | ThanthiTV
- கடந்த 1ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது...100 நாள் வேலை திட்ட பெயர் மாற்றம், அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது..
- 100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு...நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக சென்று எதிர்ப்பை பதிவு செய்த எதிர்க்கட்சி எம்பிக்கள்...
- தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நிறைவுபெற்ற நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது...பட்டியலில் பெயர் இடம்பெறாவிட்டால் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...
- ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது..சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 99 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவியது...இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்..
- வட மாநிலங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது...சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன...
Next Story
