Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (14.12.2025) | 1 PM Headlines | ThanthiTV

x
  • வடமாநிலங்களைப் போல் சென்னையிலும் காற்று மாசு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.சென்னையில் காற்றின் தரக்குறியீடு மிதமான நிலையை எட்டியுள்ள நிலையில், பொதுமக்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
  • தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி இன்றுடன் முடிவடைகிறது...வரும் வெள்ளிக்கிழமை வரைவு வாக்காளர் பட்டியலும், பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது....
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார்.வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், பாஜகவின் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
  • திமுக அமைச்சர் கே.என் நேருவுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறையில் அதிமுக புகார் அளித்துள்ளது.35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கி 2 ஆயிரத்து 538 பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
  • கேரளா மாநிலம் கண்ணூர் அருகே பையனூரில் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த ஆத்திரத்தில் காங்கிரஸ் அலுவலகத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் சூறையாடினர்.ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்