Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (13.12.2025) | 1PM Headlines | ThanthiTV
- சால்ட் லேக் மைதானத்தில் இருந்த பொருட்களை ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து சேதப்படுத்தினர்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கடுமையாக ரசிகர்கள் சாடினர்.
- பூண்டி ஏரி முழு கொள்ளளவான 35 அடியை எட்டியது....சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு செம்பரம்பாக்கம், புழல், பூண்டி என 3 ஏரிகளும் ஒரே நேரத்தில் நிரம்பியுள்ளன...
- தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.,
- கடந்த 10ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் மாநகர பேருந்து மீது கல் வீசி கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம்....பேருந்து மீது கல்வீசிய சம்பவத்தில் புதுக்கல்லூரி மாணவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்ற மாணவர்களை தேடி வருகின்றனர்....
- நெல்லை, பாளையங்கோட்டை மகளிர் பள்ளியில் மாணவிகள் மது அருந்திய விவகாரம்....6 மாணவிகளை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Next Story
