Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (11.12.2025) | 1 PM Headlines | ThanthiTV
- தாராபுரம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்...46 நாட்களில் 105 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
- நடிகர் விஜயின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார், திமுகவில் இணைந்துள்ளார்...விஜயின் புலி படத்தையும் தயாரித்துள்ள பி.டி.செல்வக்குமார், முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்திருகிறார்...
- மாமல்லபுரத்தில் இரவு விருந்து கொண்டாடிய மருத்துவ மாணவர்கள் 2 கார்களில் போட்டி போட்டுக் கொண்டு வேகமாக சென்றதால் விபரீதம்...லாரி மீது கார் மோதியதில் 21 வயது மருத்துவ மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு...
- மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்தில் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்த 2 இளைஞர்களுக்கு அடித்த ஜாக்பாட்...50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரம் கிடைத்ததால், மகிழ்ச்சியில் திளைப்பு...
- போதை பொருள் வழக்கில் குஜராத் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை...சஞ்சீவ் பட்டின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்துள்ளது...
Next Story
