இன்றைய தலைப்பு செய்திகள் (06.09.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

இன்றைய தலைப்பு செய்திகள் (06.09.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today ஹெட்லைன்ஸ்

மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயார்.....

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஏவுதளத்தில் விண்கலம் தயார் நிலையில் நிறுத்தி வைப்பு......


ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆலோசனை....

டெல்லியில் நடைபெற்று வரும் முதலாவது கூட்டத்தில் 8 பேர் கொண்ட குழுவினர் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கின்றனர்........

---

சனாதன தர்ம விவகாரத்தில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்.......

டெல்லியில் நடந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில், பிரதமர் வலியுறுத்தியதாக தகவல்.........


---சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டு ஒரு கூட்டம் பதற்றமாக உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி....

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என நாங்கள் கூறுவதாகவும் கருத்து.....

----

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றப்போவதில், ஒரு அரசியல் இருக்கிறது....

இந்தியா கூட்டணியின் பெயரே, பாஜகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக திமுக எம்.பி கனிமொழி விமர்சனம்.....

திமுக விளம்பரத்திற்காக சனாதனத்தை எதிர்த்து பேசி வருவதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு......

தாம் கடின உழைப்பால் உயர்பதவிக்கு வந்ததாகவும் கருத்து....


Next Story

மேலும் செய்திகள்