Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.09.2025) | 6AM Headlines | ThanthiTV
- தமிழகத்தில் தேனி, தென்காசி, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது....
- தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் பெய்த கன மழையால், சாலைகள் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
- நெல்லை, திருக்குறுங்குடி நம்பியாற்றில் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது
- தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தமிழகம் முழுவதும் தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது...
- தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் 3 மடங்கு உயர்ந்திருப்பதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
- தீபாவளியை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் எச்சரித்துள்ளார்
- தமிழக சட்டபேரவை கூட்டம் நாளை கூடும் நிலையில் இன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது
- நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
- நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரத்தில், இடைத்தரகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
- முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான போட்டித்தேர்வில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர்
- பீகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது...
- லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான லஞ்ச வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால், அவரது குடும்பத்தினர் டெல்லி சென்றுள்ளனர்....
Next Story
