Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.09.2025) | 6AM Headlines | ThanthiTV
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது
- கோவை, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...
- திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் நீர் திறப்பு 6 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது
- எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
- தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் உயர்ந்துள்ளது...
- நெல்லை மேலத்திடியூரில் எலி காய்ச்சல் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட தனியார் கல்லூரியில், இன்று வங்கி பணிகளுக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
- 2021, 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது
- பாரதியார் விருது முனைவர் ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது யேசுதாஸுக்கும் வழங்கப்பட்டது
- நடிகர்கள் விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி ஆகியோருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டது.
- இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் லிங்குசாமி, பாடலாசிரியர் விவேகா, பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குநர் சாண்டி உள்ளிட்டோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது..
- மொழி சிதைந்தால், தமிழர் என்ற தகுதியை இழந்துவிடுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்
- கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் எஸ்ஐடி அமைத்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வழக்கு மற்றும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீது நாளை தீர்ப்பு
Next Story
