Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.09.2025) | 6AM Headlines | ThanthiTV
- கலவரம் வெடித்த நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி பதவியேற்றார்
- நேபாளத்தின் தற்போதைய நாடாளுமன்றம் முழுமையாக கலைக்கப்பட்டது....
- இந்தியாவின் 15வது குடியரசு துணை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்...
- 2023-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வன்முறைக்கு பின், பிரதமர் மோடி முதல்முறையாக, இன்று மணிப்பூருக்கு செல்கிறார்...
- பிரதமர் மோடி மணிப்பூர் செல்வதற்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்...
- சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு அளித்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.....
- இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலை சென்னையில் பாராட்டு விழா நடைபெறுகிறது....
- தவெக தலைவர் விஜய் திருச்சியில் இன்று சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார்...
- விஜய் பயன்படுத்த உள்ள பிரசார வாகனம், திருச்சி நோக்கி சென்றபோது, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தவெகவினர் உற்சாகமாக வரவேற்றனர்
- திருச்சி, பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரிலும் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது
- தமிழக அரசியலிலேயே இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத வகையில் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்
- பிரசார பயணங்களில் கூட்டணி கட்சிகளுக்கு சிறப்பு அனுமதியும், எதிர்க்கட்சிகளுக்கு அதிகமான கட்டுப்பாட்டுகளையும் தமிழக அரசு விதிக்கிறது
- கோவையில் மனைவியின் சேமிப்பு மற்றும் கடன் மூலம் நிலம் வாங்கி இருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
- நெய்வேலி என்எல்சி நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் 2,000 மெகாவாட் மின்சாரத்தில் 500 மெகாவாட் மட்டுமே தமிழகத்திற்கு கிடைப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்
Next Story
