Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12.09.2025) | 6AM Headlines | ThanthiTV
- குடியரசு துணைத்தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று காலை10 மணியளவில் பதவியேற்கிறார்
- மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
- உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடியை மொரிஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்தித்தார்
- வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரத்தை வழங்குவோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்
- விஐபிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை ராகுல் காந்தி தொடர்ந்து மீறுவதாக சிஆர்பிஎப் குற்றம்சாட்டியுள்ளது
- இந்தியாவின் முன்னணி எல்க்ட்ரானிக்ஸ் எக்ஸ்போர்ட் மையமாக தமிழ்நாடு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்
- கடன் வாங்குவதில்தான் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது
- பா.ம.கவில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாக கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்
- அன்புமணி தனியாக கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என ராமதாஸ் அறிவுரை வழங்கினார்
Next Story
