காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தமிழகத்தில் இன்று தொடங்குகிறது, பிளஸ்-2 பொதுத்தேர்வு.... 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதும் நிலையில், ஏற்பாடுகளை தயார் செய்துள்ள பள்ளி கல்வித்துறை...
  • நாகை மாவட்டம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இன்று அரசு விழாவில் பங்கேற்கிறார்... 38 ஆயிரத்து 956 பேருக்கு சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்...
  • திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு...நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில், துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லையென விமர்சனம்...
  • அதிமுகவை விட்டு போக வேண்டாம் என்று எவ்வளவு கெஞ்சியும் ஓபிஎஸ் கேட்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு...சீனியர் என்று சொல்லும் ஓ.பி.எஸ்., தன்னை விட ஜூனியர் தான் எனவும் பேச்சு...
  • தன் மீது சீமான் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நடிகை கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு பதிலடி... தன் கண்ணீர் சீமானை சும்மா விடாது என்றும் ஆவேசம்...
  • தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு... விடுமுறையை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்...
  • முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்தியது, மகிழ்ச்சியில் மூழ்க செய்தது... எக்ஸ் தள பதிவில் இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சி....
  • சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில், நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை... நாளை மறுநாள் நடைபெறும் மற்றொரு அரையிறுதியில், தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதல்...
  • சென்னை எழும்பூரில் உள்ள தியேட்டரில் காலாவதியான குளிர்பானம் விற்கப்பட்டதாக, ஊழியர்களிடம் பெண் வாக்குவாதம்...போலீசாரிடமும் புகார் அளித்த நிலையில் விசாரணை...
  • நாமக்கல் மாவட்டம் காவேரி ஆர்.எஸ். ரயில்வே ஜங்ஷன் அருகே ரயிலில் பெண்ணிடம் 8 சவரன் தங்க சங்கிலி பறிப்பு... தப்பியோடிய கொள்ளையனுக்கு ரயில்வே போலீசார் வலைவீச்சு...
  • திருச்செந்தூர் அருகே மணப்பாட்டில், உறவுகள் சங்கமம் நிகழ்ச்சி.... அழைப்பிதழை சுட்டிக்காட்டி மேடையில் பேசிய காளியம்மாள்.....
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில், 97வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்... சிவப்பு கம்பள வரவேற்பில் ஒய்யார நடை போட்ட திரை பிரபலங்கள்...
  • நூறு கோடி ரூபாய் வசூலை ஈட்டியது, பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம்....தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல்....

Next Story

மேலும் செய்திகள்