Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (02.07.2025) | 4 PM Headlines | ThanthiTV
திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து சென்னையில் நாளை நடைபெற இருந்த த.வெ.க போராட்டம் ஒத்திவைப்பு...
வருகிற 6ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு...
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரணம் அடைந்த விவகாரத்தில் FIR இல்லாமல் விசாரித்தது போலீசாரின் அத்துமீறல் என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து....
FIR இல்லாமல் எப்படி வழக்குப்பதிவு செய்தார்கள் என்றும் கேள்வி....
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டம்....
ஆலை நிர்வாகம் சார்பாக 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்....
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...
விபத்தில் 2 பேர் காயம் அடைந்த நிலையில் அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் வெளியீடு....
குஜராத்தில் மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றவர்கள் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றதால் அதிர்ச்சி....
முன்விரோதம் காரணமாக நடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை....
