Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.09.2025) | 6AM Headlines | ThanthiTV
- வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக வலுப்பெற்றது
- மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ராமேஸ்வரத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
- கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது
- சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்துள்ளது
- காலாண்டு விடுமுறையில் பள்ளிகள் நடத்தக் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது...
- சென்னையில் பசுமை பூங்கா, விளையாட்டு அரங்கம் உட்பட 41 கோடி ரூபாய் மதிப்பிலான 7 முடிவுபெற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..
- விஜய் பிரசாரத்தின் போது, மின்கம்பங்கள், சுற்று சுவர்கள் மீது ஏறக்கூடாது, கர்ப்பிணிகள் கலந்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்...
- கரூரில் விஜய் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளை காவல்துறை விதித்தது...
- சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி, நான் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்பவன் அல்ல என த.வெ.க தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார்...
- தவெக தலைவர் விஜய், திமுகவையும், அதிமுகவையும் சேர்த்து உப்புமா கிண்டி எடுத்து வந்துள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்...
Next Story
