Today Top News Headlines || இன்றைய டாப் செய்திகள் (09.11.2025) | Thanthi TV

x

முடிதிருத்தும் சலூனை கூட மக்களின் சிந்தனையை திருத்தும் இடமாக திமுக செயல்பட வைத்தது எனவும், குக்கிராமங்களிலும் கியூபா புரட்சியையும், ரஷ்யா புரட்சியையும் திமுக தெரிய வைத்ததாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய வரலாற்று சிறப்புகளை அறியாதவர்கள் திமுகவை மிரட்டி பார்ப்பதாக கூறிய அவர், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரை மறைமுகமாக சாடினார்.


2026 சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக த.வெ.க தலைவர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது...

மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளின் பணிகளை தினமும் விஜய் நேரடியாக கண்காணிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது...


இரவில் வெளியே செல்வதற்கு கோவை ஒன்றும் சிங்கப்பூர் அல்ல என்று, கோவை சம்பவம் குறித்த கேள்விக்கு நடிகை கஸ்தூரி பதிலளித்துள்ளார்..

எப்போது வேண்டுமானாலும் வெளியே சுற்றலாம் என்பது தான் பெண்ணியம் என்றால் அப்படிப்பட்ட பெண்ணியமே தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்