Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (22-11-2023) | Morning Headlines | Thanthi TV

x

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், இரவு முழுவதும் விடாமல் கொட்டி தீர்த்த மழை...மழை நீர் தேங்கி விடாமல் தடுக்கும் பணியில், 800க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார்களுடன் மாநகராட்சி பணியாளர்கள் தீவிர களப்பணி...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை...வேகமாக நிரம்பும் நீர்நிலைகள் - விவசாயிகள் மகிழ்ச்சி...

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...மலையோர பகுதியில் வெளுத்து வாங்கிய மழையால், திருவனந்தபுரம் - செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு....

சபரிமலை ஐய்யப்பன் கோயில் மற்றும் பம்பை பகுதியில் கொட்டித்தீர்த்த கன மழை...மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்...

நாளை கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு...வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்க அழைப்பு...

தமிழக மீனவர்கள் தன்னிடம் முன் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி தருவேன்...ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி...

வரும் 26ம் தேதி நடைபெறுகிறது, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...தி.மு.க. இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பணிகள் குறித்து ஆலோசனை...

மாவட்ட கட்சி பொறுப்புகளில், சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்...அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு...


Next Story

மேலும் செய்திகள்