Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.01.2026) | 6 AM Headlines | Thanthi TV
- அஞ்சலிக்காக பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்தான் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது...பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், கண்ணீர் மல்க அஜித் பவார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்...
- இஸ்லாமியர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் ஈபிஎஸ் என, முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்...அதிமுக ஆதரவு அளித்ததால் தான் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியதாகவும் அவர் கூறினார்...
- சென்னை அடையாறில் பீகாரை சேர்ந்த குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...கைது செய்யப்பட்ட அனைவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்...
- தை பூசம், வார இறுதி நாட்களை ஒட்டி, நாளை முதல் ஒன்றாம் தேதி வரை தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன...தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
- கறிக்கோழி விலை உயர்வு தங்களது போராட்டத்தினால் ஏற்பட்டது அல்ல என, கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்...விலை உயர்வு தற்காலிகமானது எனவும், விரைவில் நிலைமை சீராகும் எனவும் கூறியுள்ளனர்...
- விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 4 வது டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது...216 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தோல்வியை தழுவியது...
Next Story
