Today Headlines | இரவு 9மணி தலைப்புச் செய்திகள் (03-07-2025) | 9PM Headlines

x

உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் மீது, நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது அடுக்கடுக்காக 6 மோசடி வழக்குகள் பதிவு...

அரசு வேலை வாங்கி தருவதாக, பலரிடம் மோசடியில் ஈடுபட்டது அம்பலம்...

அஜித்தை போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த சத்தீஸ்வரன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு...

சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உத்தரவு...

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன் குவிப்பு...

முதல் இன்னிங்சில் இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தல்...

எம்.எல்.ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என ராமதாஸ் திட்டவட்டம்...

இணைச் செயலாளர் பொறுப்பில் அருள் தொடர்வார் என்றும் அறிவிப்பு...

திண்டிவனம் அடுத்த இருதயபுரத்தில் கோலமாவு மூட்டை சரிந்து விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு...

தந்தை கோலமாவு விற்பனை செய்து வரும் நிலையில், வீட்டில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மூட்டைகளால் விபரீதம்...


Next Story

மேலும் செய்திகள்