காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (14.07.2025)
திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க, மதுரையில் இருந்து சொக்கநாதருடன் புறப்பட்டு வந்த மீனாட்சி அம்மன்...
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா கோலாகலம்...
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே டீசல் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து...
திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்தில், 18 டேங்கர்களில் இருந்த 900 டன் கச்சா எண்ணெய் எரிந்து சேதம் அடைந்ததாக தகவல்...
தமிழகம் முழுவதும் 40 டி.எஸ்.பி-க்கள் பணியிட மாற்றம்...
திமுக ஆட்சியில் போலீஸ் விசாரணையில் மொத்தம் 24 பேர் உயிரிழந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு...
திமுக ஆட்சியில் போலீஸ் விசாரணையில் மொத்தம் 24 பேர் உயிரிழந்திருப்பதாக தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு...
இயக்குநர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்பட படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு...
சென்னை எம்.ஆர்.சி. நகரில், நட்சத்திர ஓட்டலில் கஞ்சா பார்ட்டியில் ஈடுபட்ட புது மாப்பிள்ளை உட்பட 10 பேர் கைது...
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு...
புதுச்சேரியை சேர்ந்த பிரபல மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை...
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பூமிக்கு புறப்படுகிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆக்சியம்-4 குழுவினருக்கு வழியனுப்பு விழா நடத்திய விண்வெளி வீரர்கள்...
இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், தனது கணவர் பருபுல்லி கஷ்யப்பை பிரிவதாக அறிவிப்பு...
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய இந்திய ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்...
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் இத்தாலியை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் சின்னர்...
