Today Headlines | காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (20.09.2025) | 9 AM Headlines | ThanthiTV
சென்னை சென்ட்ரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது..... தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது....
வெளிநாட்டவர் அமெரிக்காவில் பணிபுரிய உதவும் H-1B விசாவிற்கான விண்ணப்பக் கட்டணத்தை சுமார் 88 லட்சம் ரூபாய் ஆக உயர்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.... அமெரிக்க வேலைவாய்ப்பில் வெளிநாட்டவரின் தாக்கத்தை தடுப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கையை டிரம்ப் முன்னெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
2 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு இன்று செல்கிறார்... 34 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்....
எம்.பி தொகுதிகளுக்கான மேம்பாட்டு நிதியை ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்... மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு சரியான நேரத்தில் மாநில அரசுக்கு நிதியை வழங்க வேண்டுமென தெரிவித்தார்.
பூம்புகார் கடலுக்கு அடியில் ஆய்வுகள் தொடங்கியது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.. பட்டினப்பாலை பாடல் வரிகளை குறிப்பிட்டு, வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என பதிவிட்டுள்ளார்....
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்... அதிமுக ஆட்சி அமைந்ததும் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், டெல்டா மாவட்டங்களான நாகை மற்றும் திருவாரூரில் இன்று பிரசாரம் செய்யவுள்ளார்.... நாகையில் அண்ணா சிலை சந்திப்பு பகுதியிலும் திருவாரூரில் தெற்கு வீதியிலும் உரையாற்றவுள்ளார்....
நாகையில் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டார்.... விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து நாகை செல்லவுள்ளார்....
நாகை, திருவாரூரில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.. பிரசாரம் முடிந்து செல்லும் போது விஜயின் வாகனத்தை பின் தொடர கூடாது, பிறர் மனம் புண்படும் வகையில் நடந்துக்கொள்ள கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்..
நாகையில் த.வெ.க தலைவர் விஜய் பிரசாராம் நடைபெறும் இடம் மாற்றப்பட்டுள்ளது... புத்தூர் அண்ணா சிலை அருகே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நண்பகல் 12 மணியிலிருந்து 1 மணி வரை பிரசாரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன...
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. சேலம், நாமக்கலில் டிசம்பர் 13ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், வரும் 27ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட 474 அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.. தமிழகத்தில் இருந்து 42 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 808 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது
