Today Headlines | இரவு 8 மணி தலைப்புச் செய்திகள் (15.01.2026) | 8 PM Headlines | Thanthi TV

x
  • விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வலையங்குளம் பாலமுருகன் முதலிடத்தை பிடித்தார்...22 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிசென்றார் பாலமுருகன்...
  • 17 காளைகளை பிடித்த அவனியாபுரம் கார்த்தி 2வது இடத்தை பிடித்தார்...2வது இடம் பிடித்த கார்த்திக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது...
  • சிறந்த காளைக்கான முதல் பரிசை, விருமாண்டி சகோதரரின் மண்டைமுத்து கருப்பன் காளை தட்டிசென்றது...முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்பட்டது...
  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன...காளையர்களுக்கு தங்கக்காசு, டிராக்டர், சைக்கிள், பாத்திரங்கள் என விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டது..
  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன...காளையர்களுக்கு தங்கக்காசு, டிராக்டர், சைக்கிள், பாத்திரங்கள் என விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டது..
  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளையர்கள் 28 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 23 பேர், பார்வையாளர்கள் 9 பேர் என 60 பேர் காயம் அடைந்தனர். மேல் சிகிச்சைக்காக 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகம் முழுவதும் அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது....குடும்பத்தோடு புதுப்பானையில் பொங்கல் வைத்து மக்கள் மகிழ்ந்தனர்
  • பொங்கல் பண்டிகையையொட்டி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்...மக்களை ஒன்றிணைத்து அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கும் பொங்கல் பண்டிகை நம் பண்பாட்டின் உயரிய மதிப்புகளை பிரதிபலிப்பதாக தமிழில் பிரதமர் பதிவிட்டுள்ளார்...
  • பொங்கல் திருநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்....இனித்திடும் செங்கரும்பை சுவைத்து, செங்கதிரோனை போற்றிடும் தமிழர் திருநாளில் தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்...
  • சேலம் மாவட்டம் மேச்சேரியில் மாட்டு வண்டியில் வந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வைத்து கொண்டாடினார். விழாவில், ஏராளமானோர் பங்கேற்ற வள்ளி கும்மி நிகழ்ச்சியை ஈபிஎஸ் பார்த்து ரசித்தார்.
  • சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை நேரில் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துகளை கூறினார்...விவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு... எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்...
  • தமிழர்களின் வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும் என தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்...அனைவருக்கும் வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்....
  • சென்னை பரங்கிமலையில் காவலர்களின் குடும்பத்தினர் சார்பில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.மாநகர காவல் ஆணையர் அருண் பங்கேற்ற விழாவில், காவலர் குடும்பத்தினர் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

Next Story

மேலும் செய்திகள்