Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (09-12-2025) | 7PM Headlines | Thanthi TV
- தமிழகத்தில் 99 புள்ளி 95 சதவீத SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது...6 கோடியே 39 லட்சத்திற்கும் அதிகமான படிவங்கள் டிஜிட்டல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது...
- SIR கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரிய வழக்கில், இயந்திரதனமான விளக்கத்தை தேர்தல் ஆணையம் அளிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது...வாக்களர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டினால் கவனத்துடன் கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது...
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு, விலக்கு அளித்த விவகாரம்...உரிய விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது...
- திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரிய வழக்கு...வரும் 17 ஆம் தேதி தமிழக தலைமை செயலர் காணொலி மூலம் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது...
- புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், பாஜகவை கடுமையாக விமர்சித்த விஜய்....என்.ஆர். காங்கிரஸையும், முதல்வர் ரங்கசாமியையும் விஜய் புகழ்ந்துள்ளது கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வி எழுந்துள்ளது...
- திருத்தப்பட்ட விமான அட்டவணையை நாளை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்...இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்...
- பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாக இண்டிகோ தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் தெரிவித்துள்ளார்...நாடு முழுவதும் உள்ள 138 வழித்தடங்களில், இன்று காலை முதல் ஆயிரத்து 800 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்
- சமமான இந்தியா என்ற மகாத்மா காந்தியின் தொலைநோக்கு பார்வை அழிக்கப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்...மக்களவையில் எஸ் ஐ ஆர் தொடர்பான விவாதத்தில் பேசிய ராகுல்காந்தி, தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கான நோக்கம் என்ன? எனவும் கேள்வி எழுப்பினார்...
- விஜய்யின் ஈரோடு பயண திட்டம் டிசம்பர் 16 ஆம் தேதிக்கு பதில் 18 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்...காவல்துறை விதித்துள்ள 88 நிபந்தனைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்...
- தொழிற்பயிற்சி நிறுவனம் இல்லாத பகுதிகளில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் ஐடிஐ விரைவில் ஆரம்பிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்..போதுமான இட வசதி உள்ள அரசு பள்ளிகளின் விவரங்களை அனுப்பவும், துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்...
- நீலகிரியில் 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி, குந்தா என்ற புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது...13 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி பந்தலூரையும் ஊராட்சி ஒன்றியம் மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது...
- கோவாவின் அர்போராவில் உள்ள நைட் கிளப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பலியான சம்பவம்...விபத்து நிகழ்ந்த நைட் கிளப்பின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அம்மாநில அதிகாரிகள் இடித்து அகற்றினர்...
- இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணி உட்பட 20 பேர் உயிரிழந்தனர்...அலுவலக கட்டடத்தின் முதல் மாடியில் இருந்த பேட்டரி வெடித்த நிலையில், பலர் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
- வங்கி முறைகேடு புகார் தொடர்பாக அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது...228 கோடி ரூபாய் வங்கி முறைகேடு புகார் தொடர்பாக அனில் அம்பானி மீது ஏற்கனவே வழக்குப்பதிந்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...
Next Story
