காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.12.2025)

x

சிவகங்கை பேருந்து விபத்தில் காயமடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர்கள் பெரியகருப்பன், சிவசங்கர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்...

அதிமுக பொதுக்குழுவால் நீக்கப்பட்டவர்களுடன் கட்சி கட்டுப்பாட்டை மீறி செங்கோட்டையன் தொடர்பில் இருந்தால் தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது...

SIR படிவங்களை டிசம்பர் 4ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டுமென கூறப்பட்ட நிலையில், டிசம்பர் 11ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது...

கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது...

இலங்கையில் வெள்ள மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது...

அமித்ஷாவின் ஆலோசனைப்படி செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் விளாசினார்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சாத்தியமான திட்டம் குறித்து உக்ரைனும் அமெரிக்காவும் முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்...

திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பயனடைந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்