மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08.09.2025)

x

கேரள மாநிலம், கண்ணூரில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த கடையின் மீது மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது... இந்த விபத்தில் ஓட்டுனர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது...

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்தில் நடிகை நவ்யா நாயருக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது...

குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது...

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்...

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், வீட்டில் இருந்த ஏசி வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலியாகினர்...

கர்நாடகாவின் மண்டியாவில் நடைபெற்ற விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தின் போது மாற்று சமுதாயத்தினர் கற்களை வீசியதால் பதற்றம் நிலவியது...

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கனமழையால் 9 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது....

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குடிநீர் ஆலைகளை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது...

தஞ்சை மாவட்டம் நடுவிக்கோட்டையில், வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பியவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்...

நேபாளத்தில் சமுக வலைதள செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தில் கலவரம் வெடித்தது.......

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்துள்ளது.....

டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கும் எந்த திட்டமும் இல்லை என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.....


Next Story

மேலும் செய்திகள்