Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31.12.2025) | 6 PM Headlines | ThanthiTV
- நியூஸிலாந்தில் 2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது
- நியூஸிலாந்தில் தலைநகர் ஆக்லாந்தில் உள்ள ஸ்கை டவர் மின்னொளியில் ஜொலிக்க, 2026 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது...கண்கவர் வாண வேடிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்...
- இன்னும் சில நிமிடங்களில் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க தயாராகியுள்ள, ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன...உலகப் புகழ்பெற்ற போண்டி கடற்கரையில் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது....
- உலகிலேயே முதல் நாடாக கிரிபாட்டி என்ற குட்டித் தீவில் 2026 ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளது...பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டித் தீவில் பழங்குடியின மக்கள், சுற்றுலாப் பயணிகள் ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடி மகிழ்நனர்..
- 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தை நேரில் கண்டுகளிக்க நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் குவிந்துள்ளனர்...ஒடிசா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சூரிய அஸ்தமனத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்....
- புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நள்ளிரவில் கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது...கடற்கரை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்...
- புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது...இரவு 9 மணிக்கு மேல் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கண்காணிப்பு டவர் அமைக்கப்பட்டுள்ளது....
- புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னை மெரினா
- ஆங்கில புத்தாண்டையொட்டி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து கூறியுள்ளனர்...திராவிட மாடல் 2.0 அமைவதற்கான தொடக்கமாக இந்த புத்தாண்டைக் கொண்டாடுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...
- ஆண்டின் கடைசி நாளில், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது....சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழாக சரிந்து 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
Next Story
