Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.12.2025) | 6 PM Headlines | Thanthi TV

x
  • நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது...2ம் வகுப்பு பெட்டிகளில் 216 முதல் 750 கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கு 5 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், தேசிய உத்வேக தளத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்....65 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனசங்கத்தை தோற்றுவித்த ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, தீன் தயாள் உபாத்யாயா மற்றும் வாஜ்பாய் சிலைகளையும் திறந்து வைத்து பிரதமர் மரியாதை செலுத்தினார்...
  • உலகிலேயே அதிக எண்ணிக்கையில் செல்போன்கள் மற்றும் இணையதள பயனாளர்களை கொண்டா நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்....செல்போன் உற்பத்தியில், உலகின் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளதாகவும், வாஜ்பாய் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட தொலைதொடர்பு கொள்கையே இதற்கு காரணம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
  • வலதுசாரி வன்முறை கும்பல்கள், கலவரத்தில் ஈடுபட்டு வருதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்...நாட்டு மக்களைப் பிளவுபடுத்திக் குளிர்காய நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
  • தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது..தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்..
  • தேயிலையில் இருந்து தயாரிக்கப்படாத எந்த ஒரு பானத்திற்கும் Tea என பெயர் வைக்கக் கூடாது என உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் அறிவித்துள்ளது..கிரின் டீ, இன்ஸ்டென்ட் டீ என போலிகள் அதிகமாக வருவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...
  • கடலூர் விபத்தில் பலியானவர்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு ..குடும்பத்தினரின் கதறலால் பெரம்பலூர் அரசு மருத்துவமனை சோகத்தில் ஆழ்ந்தது...
  • அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வரும் நிலையில் பேருந்தின் பிரேக்கை பரிசோதித்த பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு எடுக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. பேருந்து சக்கரங்களில் நட்டுகள் இறுக்கமாக இருக்கின்றனவா என்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது
  • கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 9 பேர் உயிரிழந்த விபத்தில், அரசுப்பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி தொடர்பான நிலைப்பாடு அறிவிக்கபடும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்...அதிமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 6 சீட் வழங்க இருப்பதாக வெளியான தகவல் தவறானது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்...
  • தவெகவில் பொறுப்பு வழங்கவில்லை என கூறி விஜயின் காரை மறித்த தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா 15க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஜிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்