Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.12.2025) | 6 PM Headlines | ThanthiTV

x
  • தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்...நாகைக்கு இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...
  • சென்னை, பெங்களூரு, மும்பை என நாட்டின் பல்வேறு நகரங்களில் இண்டிகோ விமானங்களின் சேவை ரத்தானது...8-வது நாளாக தொடரும் விமான சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்...
  • எந்த விமான நிறுவனமாக இருந்தாலும் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது என, மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்...இந்தியாவில் செயல்பட புதிய விமான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் மக்களவையில் அவர் விளக்கம் அளித்தார்....
  • திருத்தப்பட்ட விமான அட்டவணையை நாளை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்...இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்...
  • பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட விமான சேவை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாக இண்டிகோ தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் தெரிவித்துள்ளார்...நாடு முழுவதும் உள்ள 138 வழித்தடங்களில், இன்று காலை முதல் ஆயிரத்து 800 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்...
  • SIR கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரிய வழக்கில், இயந்திரதனமான விளக்கத்தை தேர்தல் ஆணையம் அளிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது...வாக்களர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டினால் கவனத்துடன் கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது...
  • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு, விலக்கு அளித்த விவகாரம்...உரிய விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது...
  • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் இருந்து அசாம் மாநிலத்திற்கு, விலக்கு அளித்த விவகாரம்...உரிய விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது...
  • சமமான இந்தியா என்ற மகாத்மா காந்தியின் தொலைநோக்கு பார்வை அழிக்கப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்...மக்களவையில் எஸ் ஐ ஆர் தொடர்பான விவாதத்தில் பேசிய ராகுல்காந்தி, தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியை நீக்குவதற்கான நோக்கம் என்ன? எனவும் கேள்வி எழுப்பினார்...
  • திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மனு அளித்தனர்...உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், திமுக எம்பிக்கள் டிஆர்பாலு மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் மனுவை வழங்கினர்...
  • திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரிய வழக்கு...வரும் 17 ஆம் தேதி தமிழக தலைமை செயலர் காணொலி மூலம் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது...
  • புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், பாஜகவை கடுமையாக விமர்சித்த விஜய்....என்.ஆர். காங்கிரஸையும், முதல்வர் ரங்கசாமியையும் விஜய் புகழ்ந்துள்ளது கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வி எழுந்துள்ளது...
  • புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் களத்தில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும் என, தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்...புதுச்சேரியில் தவெக ஆட்சி அமைக்கும் எனவும் பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் விஜய் கூறினார்...
  • புதுச்சேரியில் மாற்றுக் கட்சி மீது பாரபட்சம் காட்டாத ஆட்சி நடைபெறுவதாக தவெக தலைவர் விஜய் புகழாரம் சூட்டினார்...புதுச்சேரியை பார்த்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் விஜய் விமர்சித்தார்...
  • மக்களவையில் எல்.முருகன், திருச்சி சிவா இடையே காரசார விவாதம்

Next Story

மேலும் செய்திகள்