Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-10-2025) | 6PM Headlines | Thanthi TV
- சாதிப்பெயர் நீக்கம் - வழிகாட்டுதல்களை உருவாக்க அரசாணை குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்க வேண்டும் என, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது...சாதிப்பெயர் மாற்றும் பணிகளை நவம்பர் 11 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது...
- கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் - அறிக்கை வெளியீடு கோல்ட்ரிப் மருந்து உட்கொண்ட குழந்தைகள் பலியான விவகாரத்தில், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு அறை அறிக்கை வெளியிட்டுள்ளது..2 நாட்களில் கலப்படம் உறுதி செய்யப்பட்டு, விற்பனையை ரத்து செய்தது, நாட்டிலேயே முதல்முறை என தெரிவித்துள்ளது.
- இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் முக்கியமானது- பிரிட்டன் பிரதமர். இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மும்பையில் வணிக பிரதிநிதிகள் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்...இந்தியா இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்...
- தீபாவளியை ஒட்டி பலகாரம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு, 11 வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டது...பால், பால் இல்லாத பொருட்களில் தயாரிக்கும் இனிப்புகள் தனித்தனியே பேக் செய்ய வேண்டும்... தரமான எண்ணெய், நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது...
Next Story
