Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-01-2026) | 6PM Headlines | Thanthi TV
- வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை இரவு கரையை கடக்கிறது..இலங்கை ஹம்பாந்தோட்டை அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..
- திருவாரூர், நாகையில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு..சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
- மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
- கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூரில் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு....செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
- சட்டவிரோத நிலக்கரி கடத்தல் விவகாரத்தில் ஹவாலா பண பரிமாற்றம் தொடர்பாகவே ரெய்டு நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது..எந்த ஒரு அரசியல் கட்சியையும் குறி வைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது....ஒரு கிராம் ஆபரண தங்கம்12 ஆயிரத்து 750 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
- ஆபரணத் தங்கத்தை போலவே தாறுமாறாக ஏற்றம் கண்ட வெள்ளி விலை இன்று கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது...ஒரு கிராம் வெள்ளி 272 ரூபாயாகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது...
- 3 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை ஆலந்தூரில் தொடங்கி வைத்தார்....2 கோடியே 22 லட்சம் அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.....
- தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.......அரிசி குடும்ப அட்டைதாரர்கள் டோக்கன்களை காட்டி, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பெற்றுச் செல்கின்றனர்...
- பாமக-வை போலவே மேலும் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையவுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.....சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் இணைக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்...
- தொகுதி உடன்பாடு தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...பிரதமர் மோடி 23ம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில் சந்திப்பு நடைபெற உள்ளது...
- திமுக, தவெக உடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார்....கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து விட்டு, கூட்டணி குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
- தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கொடுக்காததற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.... அரசியல்வாதி விஜய் உடன் மோதுங்கள்..... நடிகர் விஜய் உடன் மோதாதீர்கள் என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஷ் சோடங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்...
- ஜனநாயகன் படத்திற்கு சென்சார் கிடைக்காததற்கு மத்திய அரசையும், பிரதமரையும் காங்கிரஸ் குறை சொல்லி மக்களை திசை திருப்புவதாக தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்... திரைப்படங்களை நேரடியாக தடை செய்த வரலாறு காங்கிரஸ் ஆட்சிக்கு உண்டு என்று விமர்சித்த அவர், சென்சார் போர்டு சட்ட ரீதியாக செயல்படுவதாக விளக்கம் அளித்துள்ளார்..
Next Story
