Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.12.2025)

x

தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது... சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரும்19ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்...பிப்ரவரி வரை 3 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது...

இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பெங்களூருவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.. நாகையில் இருந்து தாம்பரத்திற்கும், திருவனந்தபுரத்தில் இருந்து எழும்பூருக்கும் நாளை சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட இண்டிகோ விமானங்களின் டிக்கெட் கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி வழங்க விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது... நாளை இரவு 8 மணிக்குள் பணத்தை திருப்பி வழங்கவும், மறு அட்டவணை கட்டணங்களையும் வசூலிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது...

இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் எர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது...கோவைக்கு 57 ஆயிரம் ரூபாயாகவும், பெங்களூருவுக்கு 18 ஆயிரத்து 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது...

நாடு முழுவதும் விமான கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், கட்டண உச்சவரம்பை நிர்ணயித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அதன்படி 500 கி.மீ தூரம் வரை கொண்ட விமான பயணத்திற்கு 7 ஆயிரத்து 500 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது...

தங்கம் விலை சவரன் 320 ரூபாய் உயர்ந்துள்ளது...ஒரு சவரன் 96 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்காக 99.86% கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது..98.69 சதவீத படிவங்கள் டிஜிட்டல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..

அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி, நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்திற்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்... குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்...

மதுரையில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டல்... மேம்பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்...

தமிழ்நாடு அயோத்தி மாதிரி மாறுவதில் தவறில்லை என, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்... தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ராமர் ஆட்சி அமைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்...

திருப்பரங்குன்றத்தில் முருகனை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்... மலைகளில் கல்குவாரி உருவாக்கி அழிக்கும் போது யாரும் வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்...

புதுச்சேரியில் வரும் 9ஆம் தேதி விஜய் பங்கேற்கும் தவெக பொதுக்கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது..கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கூட்டத்திற்கு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது..

நேற்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு பரப்புரை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது... பொதுச்செயலாளர் ஆனந்த் உடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார் என்று விஜய் அறிவித்துள்ளார்...




Next Story

மேலும் செய்திகள்